வியட்னாமிய பெண் கைது; மற்றவருக்கு வலைவீச்சு

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அனைத் துலக விமான நிலையத்தில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் திரு கிம் ஜோங் நாமை விஷம் வைத்துக் கொலை செய்ததாக இரண்டு பெண்கள் மீது வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் வடகொரியாவுக்காகச் செயல்படும் உளவாளிகள் என்று நம்பப்படுகிறது. தாக்குதலை நடத்திய பெண் களில் ஒருவரது படத்தை மலேசிய அதிகாரிகள் நேற்று வெளியிட் டனர். விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவிலிருந்து அந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்நிலையில், திரு கிம்மின் கொலை தொடர்பில் வியட்னாமைச் சேர்ந்த பெண் ஒருவரை கோலா லம்பூர் விமான நிலையத்தின் மலிவுக் கட்டண முனையத்தில் மலேசிய போலிசார் நேற்று கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட திரு கிம் ஜோங் நாம் (இடது). திரு கிம்மைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண்களில் ஒருவர் (வலது). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!