ஆஹோக், பஸ்வெடான் இடையே கடும் போட்டி

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவின் ஆளுநர் தேர்தலில் தற்போது அப்பதவியை வகிக்கும் ஆஹோக் என்றழைக்கப்படும் பசுகி ஜஹஜா புர்னாமாவுக்கும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் அனிஸ் பஸ்வெடானுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. சிங்கப்பூர் நேரப்படி நேற்று மாலை 7.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கையின் போக்கு அடிப்படையில் பஸ்வேடான் 40.54% வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆஹோக் 39.43% வாக்குகளும் மற்றொரு வேட்பாளரான அகுஸ் யுதயோனோ 20.03 % வாக்குகளும் பெற்றிருந்தனர். யாருக்கும் 50%க்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காவிடில் முதல் இரண்டு நிலைகளில் வரும் வேட்பாளர்களிடையே போட்டி நடத்தப்படும்.

ஜகார்த்தா ஆளுநர் தேர்தலுக்குத் தமது மனைவி, மகனுடன் வாக்களிக்க வரும் பசுகி ஜஹஜா புர்னாமாவுடன் (நடுவில்) ஆசையாசையாய் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் ஆதரவாளர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!