தென்சீனக் கடல் விவகாரம்; ஆசிய நாடுகளின் கவலை

மணிலா: தென்சீனக் கடல் பகுதியில் அண்மைய நிலவரம் குறித்து ஆசியான் நாடுகள் கவலை கொள்வதாக பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் ஃபெர்பெக்டோ யாசே கூறினார். பிலிப்பீன்சில் நடந்த ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். அந்த கடல் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மேலும் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆசியான் அமைச்சர்கள் கவலைப்படுவதாக திரு ஃபெர்பெக்டோ கூறினார். அப்பகுதிக்கு உரிமை கொண்டாடும் நாடுகள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தென்சீனக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதன் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் அப்பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. பிலிப்பீன்ஸ், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளும் அப்பகுதிக்கு உரிமை கொண்டாடி வருகின்றன.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!