ஜோகூர் சோதனைச் சாவடியில் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள் தவிப்பு

ஜோகூர்பாரு: வேலைக்குச் சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள் நேற்று ஜோகூர்பாரு குடிநுழைவுத் துறை சோதனைச் சாவடியில் தவிக்க நேர்ந்தது. சோதனைச் சாவடி நுழைவிடங்களில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள தானியக்க சாதனங்கள் பழுதடைந்ததே அதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறினர். இதே பிரச்சினை திங்கட்கிழமையும் இருந்தது என்றும் இதனால் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் பல ஊழியர்கள் நேற்று தாமதமாக வேலைக்குச் சென்றதாகவும் ஊடகத் தகவல்கள் கூறின. ஜோகூர் சோதனைச் சாவடியில் நெரிசலைத் தவிர்க்க புதிய தானியக்க முறை தொடங்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் தானியக்க சாதனம் பழுதடைந்ததால் அங்கு குழுப்பம் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!