பூமியைப் போன்று ஏழு கோள்கள் கண்டுபிடிப்பு

வா‌ஷிங்டன்: பூமியைப் போன்று அளவு கொண்ட ஏழு புதிய கோள்களை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஏழு கோள்களும் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிராப்பிஸ்ட்-1 எனும் நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பு மூலம் பூமியைப் போல மேலும் ஏழு உலகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மூன்று கோள்களில் உயிர் வாழக்கூடிய சாத்தியம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் போன்ற உயிர் வாழ்வதற்குத் தேவையான சூழல்கள் மூன்று கோள்களில் தென்படுவதாக ஆய்வாளர்கள் கூறினர். நாசாவின் 'ஸ்பைசர்' விண்வெளி தொலைநோக்கி மூலம் இந்தப் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "அனைத்துக் கோள்களும் நெருக்கமாக அமைந்துள்ளன," என்று மூத்த ஆய்வாளரான மைக்கல் கிலோன் தெரிவித்தார்.

ஏழு கோள்களின் தோற்றத்தை விளக்கும் ஓவியரின் படத்தை தென் ஐரோப்பிய ஆய்வுக்கூடம் வெளியிட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகள்: தமிழ்முரசு இ-பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!