இலங்கைப் பெண்கள் பாலியல் வதையை விசாரிக்கக் குழு

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடந்த போரில் மரண முற்ற வீரர்களின் மனைவிமார்கள் பாலியல் கொடூரத்துக்கு ஆளாகி வருவதாக அண்மையில் செய்தி கள் வெளியாயின. தமிழ்ப் பெண்களை இலங்கை ராணுவத்தினர் பாலியல் அடிமை களாகப் பயன்படுத்தியதாக தென் னாப்பிரிக்காவைத் தலைமையிட மாகக் கொண்ட உண்மை, நீதிக் கான அனைத்துலக அமைப்பு தெரிவித்து இருந்தது. வவுனியா, புத்தளம் உள்ளிட்ட இடங்களில் பெண்களைக் கைது செய்து, அவர்களை அடைத்து வைத்து இலங்கை ராணுவத்தினர் பாலியல் கொடூரம் புரிந்ததாகவும் அது குறிப்பிட்டது.

இதுபோன்ற குற்றங்களில் ஈடு பட்ட ராணுவத்தினரின் விவரங்க ளையும் அந்த அமைப்பு வெளியிட் டது. இவ் விவகாரத்தில் உயர் ராணுவ அதிகாரிகளும் சிக்கியுள் ளனர். முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் 48 பெண்களும் தற்போதைய மைத்ரிபால சிறிசேன ஆட்சியில் 7 பெண்களும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி உள்ள தாகக் குறிப்பிட்ட அந்த அமைப்பு பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்கு மூலங்களையும் தொகுப்பாக வெளி யிட்டுள்ளது.

விவரம்: தமிழ்முரசு இ-பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!