வடகொரியத் தூதரை வெளியேற்ற மலேசியா தீவிர பரிசீலனை

கோலாலம்பூர்: வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம், கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவுக்கும் வடகொரியா வுக்கும் இடையே பதற்றம் நீடிக்கும் வேளையில் வடகொரியத் தூதரை வெளியேற்றுவது குறித்து மலேசியா பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறு கின்றன. அக்கொலை தொடர்பில் வட கொரியத் தூதர் கூறிய கருத்துக்காக அவரை வெளி யேற்றலாமா அல்லது வட கொரியாவில் உள்ள மலேசியத் தூதரகத்தை மூடலாமா என்பது குறித்து மலேசிய அரசாங்கம் பரீசீலித்து வருவதாக மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வடகொரிய நாட்டவரான 46 வயது கிம் ஜோங் நாம் பிப்ரவரி 13ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொல்லப்பட்டார். அக்கொலையைத் தொடர்ந்து வடகொரியத் தூதர் காங் சோய் சென்ற வாரம் கருத்து தெரி வித்திருந்தார்.

அக்கொலை தொடர்பாக மலேசியா மேற்கொள்ளும் விசாரணையை வடகொரியா நம்ப முடியாது என்றும் தென் கொரியாவுடன் சேர்ந்து மலேசியா சதி செய்கிறது என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!