அமெரிக்காவில் மேலும் ஓர் இந்தியர் சுட்டுக்கொலை

நியூயார்க்: அமெரிக்காவில் மேலும் ஓர் இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்கப் போலிசார் தெரிவித்துள்ளனர். இந்திய வம்சாவளியினரான 43 வயது ஹர்னிஷ் பட்டேல் சவுத் கரோலினாவில் அவரது வீட்டுக்கு வெளியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலிஸ் அதி காரிகள் கூறினர். சவுத் கரோலினா, லங்காஸ்டர் பகுதியில் கடை வைத்திருந்த ஹர்னிஷ் பட்டேல் வியாழக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு ஒரு மினிவேனில் 6 கி.மீ தொலைவில் உள்ள தனது வீட்டுக்குப் புறப் பட்டிருக்கிறார். அவரது வீட்டுக்கு அருகே நள்ளிரவுக்குச் சில நிமிடங்கள் முன்னதாக பட்டேல் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கலாம் என்று போலிஸ் வட்டாரங்கள் கூறின. அன்று இரவு 11.33 மணியளவில் லங்காஸ்டர் போலிசாருக்கு அவசர தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து அங்கு சென்ற போலிசார் ரத்த வெள்ளத்தில் ஹர்னிஷ் பட்டேல் இறந்து கிடப்பதைப் பார்த்ததாக போலிசார் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!