ஈராக் தவிர்த்து 6 நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்குள் நுழைய ஈராக் தவிர்த்து மற்ற 6 முஸ்லிம் நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான புதிய ஆணையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதற்கு முன்பு சிரியா, லிபியா, ஈரான், ஈராக், சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தற்காலிகத் தடை விதிக்கும் ஆணையில் திரு டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார். அதற்கு எதிர்ப்பு வலுத்து வந்த நிலையில் திரு டிரம்ப் தற்போது திருத்தப்பட்ட பயணத் தடை ஆணையில் கையெழுத்திட்டார். முன்பு தடை விதிக்கப்பட்டிருந்த ஈராக் இதில் சேர்க்கப்படவில்லை. புதிய பயணத் தடை, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம் என்று டிரம்ப் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இருப்பினும் புதிய தடை குறித்து டிரம்ப் நிர்வாகத்தினர் சட்டரீதியிலான சவாலை எதிர்நோக்குவதாக சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!