தென்கொரியா: அவர் கிம் ஜோங் நாமின் மகன்தான்

சோல்: யூடியூப் காணொளியில் பேசிய இளையர், கடந்த மாதம் கோலாலம்பூர் விமான நிலையத் தில் கொல்லப்பட்ட கிம் ஜோங் நாமின் மகன்தான் என்று தென் கொரிய வேவுத்துறை அதி காரிகள் உறுதி செய்துள்ளனர். கிம்மின் குடும்பத்தினரைப் பாதுகாத்துவருவதாகக் கூறும் சியோலிமா குடிமைத் தற்காப்பின் யூடியூப் பக்கத்திலும் இணையத் திலும் பதிவேற்றப்பட்ட காணொ ளியில் இளையர் ஒருவர், தம்மை மறைந்த கிம் ஜோங் நாமின் மகன் கிம் ஹான் சோல் என்று தெரிவித்தார். ஆங்கிலத்தில் பேசும் அவர், "என் பெயர் கிம் ஹான் சோல். வடகொரியாவைச் சேர்ந்த கிம் மின் குடும்பத்தைச் சேர்ந்தவன். இதுதான் என்னுடைய கடவுச் சீட்டு," என்று கூறி ஒரு கடவுச் சீட்டைக் காட்டுகிறார்.

தென்கொரியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கிம் ஹான் சோலின் காணொளியைப் பலர் ஆர்வத்துடன் பார்த்தனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!