வடகொரியாவுடன் உறவு துண்டிக்கப்படாது: மலேசியா

பெட்டாலிங் ஜெயா: வடகொரியாவுக் கும் மலேசியாவுக்கும் இடையே அரசதந்திர உறவு மோசம் அடைந்துவரும் நிலையில் நேற்று அவசரமாகக்கூடிய தேசிய பாது காப்பு மன்றக்கூட்டத்தில் பிரதமர் நஜிப், வடகொரியாவில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். இதற்காகவே திரு நஜிப் தமது ஜகார்த்தா பயணத்தைச் சுருக்கிக் கொண்டு அவசரமாக நாடு திரும் பினார். இதையடுத்து 2009ல் பிரதமர் பொறுப்பு ஏற்ற பிறகு முதல் முறை யாக திரு நஜிப் தலைமையில் தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டம் கூடியது. சுமார் 45 நிமிடம் நீடித்த கூட் டத்தில் அண்மைய நிலவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகள் பிரதமரிடம் விவாதித்தன. தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு நஜிப், வடகொரியாவில் உள்ள 11 மலேசியர்களும் பாது காப்பாக இருப்பதாகவும் வழக்க மான பணிகளில் அவர்கள் தங்குத்தடையின்றி ஈடுபட்டு வரு வதாகவும் கூறினார்.

கோலாலம்பூரில் வடகொரிய தூதரகத்திலிருந்து ஊழியர்களுடன் வெளியேறிய காரை செய்தியாளர்கள் சூழ்ந்து படம் பிடித்தனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!