பேங்காக்: தாய்லாந்தில் உள்ள தமகாயா கோவிலைச் சேர்ந்த ஃப்ரா தமச்சாயா என்ற புத்த பிக்கு பல்வேறு குற்றச்சாட்டு களின் பேரில் விசாரணைக்காக தேடப்பட்டு வருகிறார். அவர் அக்கோவிலுக்குள் தலைமறை வாக இருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால் அக்கோவிலுக்குள் அவர் இல்லை என்று அக் கோவிலைச் சேர்ந்த மற்ற புத்த பிக்குகள் கூறுகின்றனர்.
இருப் பினும் அக்கோவிலுக்குள் நுழைந்து அவரைத் தேட ராணுவ வீரர்கள் முயன்றபோது அவர்களை புத்த பிக்குகள் தடுத்து நிறுத்து கின்றனர். ராணுவ வீரர்களுக்கும் புத்த பிக்குகளுக்கும் இடையே கடந்த மூன்று வாரங்களாக மோதல் நீடிக்கிறது. படம்: ராய்ட்டர்ஸ்