ஐஎஸ் தொடர்புடைய சந்தேகப் பேர்வழிகள் மலேசியாவில் பிடிபட்டனர்

கோலாலம்பூர்: ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு உடையவர்கள் என்று நம்பப்படும் எழுவரை மலேசியப் போலிசார் சென்ற வாரம் கைது செய்தனர். இவர்களில் மலேசிய குடிநுழைவுத் துறையைச் சேர்ந்த 31 வயது பெண் அதிகாரியும் ஒருவர். கடந்த வாரம் புதன்கிழமை தொடங்கி நேற்று வரையிலான போலிசாரின் அதிரடி நடவடிக்கை யில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார். சாபா மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத் தில் அவர்கள் கைது செய்யப் பட்டனர். இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐஎஸ் போராளிகள் உள்பட பலர் உரிய ஆவணங்கள் இன்றி சாபா செல்வதற்கும் பின்னர் அங்கிருந்து தெற்கு பிலீப்பீன்சிற்கு செல்லவும் அந்தப் பெண் அதிகாரி ஏற் பாடுகளைச் செய்ததாக திரு காலிட் கூறினார்.

ஐஎஸ் குழுவுடன் தொடர்புடையை சந்தேகப் பேர்வழிகள் 7 பேரை மலேசியப் போலிசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரி ஆவார். சாபா மற்றும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!