வடகொரிய ஊழியர்கள் பலரை மலேசியா வெளியேற்றக்கூடும்

கோலாலம்பூர்: வேலை அனுமதிச் சீட்டு காலவதியான பின்னரும் மலேசியாவில் தொடர்ந்து வேலை செய்யும் வடகொரிய ஊழியர் களை அவர்களின் சொந்த நாட்டுக்கு மலேசியா திருப்பி அனுப்பக்கூடும் என்று மலேசிய துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார். வடகொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை தொடர்பில் மலேசியாவுக்கும் வடகொரி யாவுக்கும் இடையே பதற்றம் நீடிக்கும் வேளையில் மலேசி யாவின் இந்த அறிவிப்பு வெளி வந்துள்ளது. வடகொரியாவிலிருந்து வெளியேற இன்னும் 9 மலேசியர் களுக்கு வடகொரியத் தலைவர் அனுமதி வழங்காத நிலையில் மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் கூடுதலாக தங்கி யிருக்கும் வடகொரிய ஊழியர் களைத் திருப்பி அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாக திரு சாகிட் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!