நடுவானில் வெடித்து, தீப்பிடித்த ‘ஹெட்ஃபோன்’

விமானப் பயணி ஒருவரின் 'ஹெட்ஃபோன்' எனப்படும் காதுகளில் மாட்டிக்கொண்டு இசை கேட்கப் பயன்படுத்தப்படும் கருவி நடுவானில் வெடித்துத் தீப்பிடித்துக்கொண்டது. இந்தச் சம்பவம் பெய்ஜிங் கிலிருந்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் நிகழ்ந்தது. 'ஹெட்ஃபோனை' பயன்படுத்திக் கொண்டிருந்த பெண் பயணிக்கு முகத்திலும் கையிலும் தீக்காயங்கள் ஏற் பட்டன. அவரது பெயர் வெளி யிடப்படவில்லை. விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது தாம் 'ஹெட்ஃபோன்' பயன்படுத்தி இசை கேட்டுக்கொண்டே தூங்கிக் கொண்டிருந்ததாகப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஆஸ்திரேலியப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவிடம் தெரி வித்தார். பயணம் தொடங்கி இரண்டு மணி நேரம் கழித்து, திடீரென ஒரு வெடிப்புச் சத்தம் கேட்டதாக அவர் கூறினார். கேட்டதாக அவர் கூறினார். தமது முகத்தில் எரிச்சலை உணர்ந்த அந்தப் பெண், வலி தாங்காமல் முகத்தைப் பிடித்துக் கொண்டதால் 'ஹேட்ஃபோன்' தமது கழுத்துக்கு நழுவியதாக குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!