வடகொரியாவை நெருக்க சீனாவுக்கு அறிவுறுத்தல்

பெய்ஜிங்: வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தை கைவிடச் செய்ய அதன் நட்பு நாடான சீனாவின் உதவி தேவை என்று பெய்ஜிங் வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. தென்கொரியப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சீனா வந்துசேர்ந்த திரு டில்லர்சன், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு நடத்தினார். இன்று சீன அதிபர் ஸி ஜின்பிங்கை திரு டில்லர்சன் சந்தித்துப் பேசவுள்ளார். இவ்விருவரும் இருதரப்பு உறவு குறித்தும் வடகொரிய விவகாரம் குறித்தும் முக்கியமாக விவாதிப்பார்கள் என்று தெரி கிறது. வடகொரியா அதன் அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட சீனா அந்நாட்டை நெருக்க வேண் டும் என்றும் வடகொரியாவைக் கட்டுப்படுத்த சீனா அதிகம் செய்ய வேண்டும் என்றும் திரு டில்லர்சன் இந்த சந்திப்பின்போது கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது.

பெய்ஜிங் வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லர்சனுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி. (வலது) படம்: ஏஎ::ஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!