சீனா, அமெரிக்கா உறவை வலுப்படுத்த உறுதி

பெய்ஜிங்: சீன அதிபர் சி ஜின்பிங், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகளின்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த உறுதியளித் துள்ளனர். வடகொரியா, வர்த்தகம் ஆகியவற்றின் தொடர்பில் தங் கள் உறவில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்ய இரு நாடுகளும் முயற்சி செய்யும் என்றும் சொல் லப்பட்டது. வடகொரியா ராக்கெட் எஞ்சின் ஒன்றை வெற்றிகரமாகச் சோதனை செய்த சில மணி நேரங்களில் திரு சி, திரு டில்லர்சன் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது. மேலும், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை சீன அதிபர் சி ஜின்பிங் அடுத்த மாதம் அமெரிக்காவில் சந்திப்பது தொடர்பான பேச்சுவார்த்தை களும் இந்த உரையாடலில் இடம்பெற்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!