இயல்பு நிலைக்குத் திரும்பியது ஓர்லி விமான நிலையம்

பாரிஸ்: பாரிசில் உள்ள ஓர்லி விமான நிலையம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. சில விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றாலும் நேற்று போக்குவரத்துச் சீரடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அந்த விமான நிலையத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரண மாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் சுமார் 3,000 பயணிகள் அங்கிருந்து பாதுகாப் பாக அப்புறப்படுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் ராணுவ வீரர் ஒருவரிடமிருந்த துப்பாக்கி யைப் பறித்த சையது பென் பெல்காசெம் எனப்படும் 39 வயது பிரஞ்சு நாட்டவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அவர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விசாரணை மேற் கொண்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!