நாடாளுமன்றக் குழு விசாரணையில் உளவுத்துறை தலைவர்கள் சாட்சியம்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தேர்தல் பிரசாரத்திற் கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது குறித்த விசாரணையில் அமெரிக்க உளவுத்துறை தலைவர்கள் நாடாளுமன்றக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்க விருப்பதாக வா‌ஷிங்டன் தகவல்கள் கூறின. திரு டிரம்ப்பின் தொலைபேசி உரையாடலை திரு ஒபாமா ஒட்டுக்கேட்டதாக திரு டிரம்ப் கூறியுள்ளது பற்றியும் அவ்விரு தலைவர்களும் நாடாளுமன்றக் குழு விசாரணையில் பதில் அளிக்கவுள்ளனர். மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் ஜேம்ஸ் கோமியும் என்எஸ்ஏ தலைவர் அட்மிரல் மைக் ரோஜர்சும் நாடாளுமன்றக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கவுள்ளனர். அமெரிக்கத் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யா தலையிட்ட தாகக் கூறப்படுவதை ரஷ்ய அதிகாரிகள் ஆரம்பத்திலிருந்தே மறுத்து வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!