தாய்லாந்து பிரதமரைக் கொல்ல சதித் திட்டம்

பேங்காக்: தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா உள்பட ராணுவ ஆட்சியாளர்களைக் கொல்ல அல்லது காயப்படுத்த சிவப்பு சட்டை இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் சதித் திட்டம் தீட்டியிருந்ததை அந்நாட்டுப் போலிசார் கண்டுபிடித்தனர். தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ‌ஷினவத்ராவுக்கு ஆதர வான சிவப்பு சட்டை இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரது வீட்டில் போலிசார் சென்ற வார இறுதியில் மேற்கொண்ட சோதனையின்போது 16 இயந்திர துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், 13 சாதாரண துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப் பட்டதாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை தாய்லாந்து போலிஸ் படைத் தலைவர் ஜக்திப் சாய்ஜின்டா, செய்தியாளர் கூட்டத்தில் காண்பிக்கிறார். சிவப்பு சட்டை இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் வீட்டில் போலிசார் மேற்கொண்ட சோதனையின்போது இயந்திர துப்பாக்கிகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் சொன்னார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!