வாஷிங்டன்: சென்ற ஆண்டு அமெரிக்காவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது திரு டிரம்ப்பின் தொலைபேசி உரையாடல்களை அப்போதைய அதிபர் ஒபாமா ஒட்டுக்கேட்டதாக டிரம்ப் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் ஜேம்ஸ் கோமி கூறியுள்ளதைத் தொடர்ந்து திரு ஒபாமா மீது கூறிய குற்றச் சாட்டுக்காக அவரிடம் திரு டிரம்ப் அவசியம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் உளவுத் துறை இயக்குநர் லியோன் பெனட்டா கூறியுள்ளார். இதுபோன்ற குற்றசாட்டுகள் கூறுவதைத் தவிர்த்து திரு டிரம்ப் சுகாதார கவனிப்பு, குடிநுழைவு போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று பெனட்டா கேட்டுக்கொண்டார்.
புலனாய்வுத் துறை இயக்குநர் ஜேம்ஸ் கோமியும் என்எஸ்ஏ இயக்குநர் ரோஜர்சும் நாடாளுமன்றக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்