பிரெக்சிட்: ஈராண்டு காலக்கெடு தொடக்கம்

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவில் மாற்றம் நிகழாது என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். விலகினாலும் ஒன்றியத்துக்கு கடப்பாடுள்ள ஒரு பங்காளியாக பிரிட்டன் விளங்கும் எனறார் அவர். ஒன்றியத்திலிருந்து விலகுவ தால் ஏற்படும் விளைவுகள் பற்றித் தமக்குத் தெரியும் என்ற அவர், நெருக்கமான, சாத்தியமுள்ள பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்த தாம் விரும்புவதாக நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டார். முன்னதாக, ஐரோப்பிய ஒன்றி யத்திலிருந்து வெளியேறும் பிரிட் டனின் இணக்கத்தை உறுதிப் படுத்தும் கடிதத்தை பிரிட்டிஷ் தூதரிடமிருந்து ஐரோப்பிய மன்றத் தலைவர் டோனல்ட் டஸ்க் நேற்று பெற்றுக்கொண்டார். டஸ்கின் பிரஸ்ஸல்ஸ் அலு வலகத்தில் செய்தியாளர்கள் முன் னிலையில் அந்தக் கடிதம் ஒப் படைக்கப்பட்டது.

பிரதமர் தெரேசா மே கையெழுத் திட்ட கடிதத்தை பிரிட்டிஷ் தூத ரிடமிருந்து பெற்றுக் கொண்ட ஐரோப்பிய மன்றத் தலைவர் டோனல்ட் டஸ்க் (வலது). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!