நஜிப்: 9 மலேசியர்கள் இன்று நாடு திரும்புகின்றன

கோலாலம்பூர்: வடகொரியாவை விட்டு வெளியேற முடியாமல் தவித்த 9 மலேசியர்கள் அந் நாட்டைவிட்டு வெளியேற அனு மதிக்கப்பட்டனர். அவர்கள் நேற்று மாலை வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கிலிருந்து புறப்பட்டனர். அந்த 9 பேரும் இன்று காலை ஐந்து மணியளவில் மலேசியாவில் வந்து இறங்குவர் என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி னார். "இனி மலேசியாவில் உள்ள வடகொரிய நாட்டவர்கள் மலேசி யாவைவிட்டுச் செல்ல நாங்கள் அனுமதிப்போம்," என்று திரு நஜிப் கூறினார். மலேசிய தூதரக அதிகாரிகள் மூவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் வட கொரியாவில் சிக்கியிருந்தனர்.

அவர்களைப் பத்திரமாக விடு விப்பது தொடர்பில் மலேசியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆளும் தேசிய முன்னணிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு நஜிப், இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் நல்ல பலன் கிடைக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று கூறினார். ஐந்து நாள் பயணமாக இந்தியா புறப்படுவதற்கு முதல் நாள் அவர் இவ்வாறு கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!