சிபு: மலேசியாவின் சிபு விமான நிலையத்தில் விமானம் சறுக் கிய சம்பவம் காரணமாக நான் காயிரம் பயணிகளுக்கு மேல் தவிக்க நேரிட்டது. விமான நிலையம் நேற்று ஒரு நாள் மூடப்பட்டதோடு ஏறக்குறைய 48 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சனிக்கிழமை இரவு 10.17 மணியளவில் சிபு விமான நிலையத்தில் 'மாசுவிங்ஸ்' விமானம் அவசரமாக தரையிறங் கியது. அப்போது விமானம் சறுக்கிச் சென்றது. அதில் 61 பயணிகளும் ஆறு விமான ஊழியர்களும் இருந்தனர். அனைத்துப் பயணிகளும் பக்கவாட்டு வாயில் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக் கப்பட்டது. சம்பத்தின்போது வேறு விமானங்கள் எதுவும் தரை யிறங்கவில்லை.
சிபு விமான நிலையத்தில் இறங்கிய விமானம் ஒன்று ஓடுபாதையில் சறுக்கிச்சென்றது. படம்: த ஸ்டார் ஆன்