வடகொரியா தோல்வி; பரிசோதனையில் ஏவுகணை சிதறியது

வடகொரியா நேற்று பரிசோதித்த ஏவுகணை ஒன்று உயரே கிளம்- பிய உடனேயே வெடித்துச் சிதறி விட்டது என்றும் இந்த முயற்சியில் வடகொரியா தோல்வி அடைந் திருக்கிறது என்றும் நேற்று அமெரிக்க பசிபிக் தளபத்தியம் தெரிவித்தது. வடகொரியாவின் அணுஆயுத ஏவுகணை நடவடிக்கைகள் அதி கரித்து வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் கூடுகிறது என்று அமெரிக்கா கடுமையாக எச்சரித்து வரும் வேளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தப் பதற்றம் தொடர்பில் பேச்சு நடத்த அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நேற்று தென்கொரியா வரவிருந்த நேரத்- தில் வடகொரியா ஏவுகணைச் சோதனையை நடத்தி அதில் தோல்வி அடைந்தது.

வடகொரியாவின் நேற்றைய ஏவுகணை முயற்சி தோல்வி அடைந்ததில் வியப்பு எதுவும் இல்லை என்றும் அந்நாட்டுக்கு எதிராக மேலும் வளங்களைக் குவிக்கத் தேவை இல்லை என் றும் வெள்ளை மாளிகை வெளி யுறவுக் கொள்கை ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார்.