சீனாவைச் சேர்ந்த 50 பேர் ஜோகூர் விமான நிலையத்தில் தவிப்பு

ஜோகூர் பாரு: வேலை வாங்கித் தருவதாக நடத்தப்பட்ட மோசடியில் சீனாவைச் சேர்ந்த ஐம்பது பேர் ஜோகூர் விமான நிலையத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜோகூரில் உள்ள கட்டுமானத் தளத் தில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக சீனாவைச் சேர்ந்த விவசாயி களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முகவர் ஒருவ ரிடம் 12,000 ரிங்கிட் முதல் 38,000 ரிங்கிட் வரை பலரும் பணம் கொடுத்திருந்ததாகக் கூறப்பட்டது. இதற்காக அவர்கள் தங்களது சொந்த நிலங்களையும் கால்நடைகளையும் விற்றுப் பணம் திரட்டித் தந்தனர். அதனைத் தொடர்ந்து சீனாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த அவர்கள் வேலையில் சேரும் நோக்கில் கடந்த 10ஆம் தேதி முதல் ஜோகூருக்கு வரத் தொடங் கினர். செனாய் விமான நிலையத்தில் அவர் களை வரவேற்ற முகவர் ஒருவர் கேலாங் பாத்தா என்னும் இடத்தில் உள்ள கட்டு மானத் தளம் ஒன்றுக்கு ஐம்பது பேரையும் அழைத்துச் சென்றதாக 'த ஸ்டார்' செய்தி குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!