வாக்கெடுப்பு குறித்து குறைகூறியவர்களை சாடிய துருக்கி அதிபர்

அங்காரா: துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன், கூடுதல் அதிகாரத்தை அளிக்கும் பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள் ளார். ஆனால் இந்த வாக்கெடுப்பை அனைத்துலக கண்காணிப் பாளர்கள் குறை கூறியுள்ளனர். எதிர்க்கட்சிகளும் பொது வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்க முடியாது என்று அறிவித்துள்ளன. குறை கூறுபவர்களின் குற்றச் சாட்டுகளை மறுத்த அதிபர் எர் டோகன், "துருக்கியின் அரசியல் முறையை வடிவமைப்பதற்கு மட்டுமல்லாமல் நாட்டின் எதிர் கால இலக்கை நிர்ணயிப்பதற்கும் வாக்கெடுப்பு அவசியம்," என்று குறிப்பிட்டார். துருக்கி, 1952ஆம் ஆண்டி லிருந்து நேட்டோ உறுப்பினராக இருந்து வருகிறது. பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற கையோடு அங்காராவில் உள்ள அதிபர் மாளிகைக்குத் திரும்பிய திரு எர்டோகன் அங்கு கூடியிருந்த ஆயிரக் கணக்கான ஆதரவாளர்கள் இடையே உரை ஆற்றினார். 'உங்கள் இடத்தை அறிந்து பேசு' என்று கண்காணிப்பாளர் களை அவர் சாடினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!