வடகொரியா: எத்தகைய போரையும் சந்திக்கத் தயார்

நியூயார்க்: அமெரிக்காவின் நட வடிக்கைகளால் ஏற்படும் எத்த கையப் போரையும் சமாளிக்க வடகொரியா ஆயத்தமாகி வருகிறது என்று ஐநாவுக்கான வடகொரியத் தூதர் நேற்று எச்சரித்தார். அணுவாயுதத் தாக்குதல் உட்பட எந்தவிதமான ஏவுகணைத் தாக்குதலுக்கும் பதிலடித் தரப் படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக அமெரிக்காவின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் எச்சரித்த தைத் தொடர்ந்து ஐநாவுக்கான வடகொரிய துணைத்தூதர் கிம் இன் ரியோங்கின் எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது.

"அமெரிக்கா துணிச்சலாக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் அமெரிக்கர்களின் விருப்பப் படி எத்தகையப் போரையும் எதிர் கொள்ள வடகொரியா தயாராக உள்ளது. எந்தவிதமான ஆத்திர மூட்டும் செயல்களையும் கடுமை யான முறையில் பதிலடித் தரு வோம்," என்று நியூயார்க்கில் ஐநா தலைமையகத்தில் செய்தி யாளர் கூட்டத்தில் பேசிய கிம் சொன் னார். "ஏற்கெனவே அமெரிக்காவின் ராணுவ மிரட்டலுக்கு எதிராக வட கொரியா தற்காப்பு நடவடிக்கை களை எடுத்துள்ளது. "இது, அணுவாயுதத் தாக்கு தலை எதிர்கொள்ள வடகொரியா உறுதியாக இருப்பதைக் காட்டு கிறது," என்று அண்மையில் கண் டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணைச் சோதனையை சுட்டிக் காட்டிய கிம் கூறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வட கொரியா மற்றொரு ஏவுகணையைச் சோதித்துப் பார்த்தது. இதனால் 6வது அணுவாயுத சோதனைக்கு வட கொரியா ஆயத்தமாகி வருகிறது என்ற அச்சம் பரவியது.

வடகொரியாவில் இம்மாதம் 16ஆம் தேதி அன்று நாட்டை நிறுவிய தந்தை என்று போற்றப்படும் கிம் இல் சங்கின் 105வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஏவு கணையை ராணுவ வாகனம் ஒன்று ஏற்றிச் செல்வதைக் காணலாம். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!