‘அமெரிக்கப் பொருட்களையே வாங்கி அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துக’

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதிய உத்தரவு ஒன்றில் விரைவில் கையெழுத் திடுவார் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இந்த உத்தரவு, அமெரிக்க பொருட்களையே வாங்கி, வேலை வாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முதலிடம் வழங்குவதை உறுதிப் படுத்தும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித் தனர். மேலும் அமெரிக்காவில் செயல் படும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்குப் பதிலாக குறைவான சம்பளத்தில் வெளி நாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதை புதிய உத்தரவு தடுக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அரசாங்கத் திட்டங்களை வெளிநாட்டு ஒப்பந்த நிறுவனங்கள் கைப்பற்றுவதையும் புதிய கொள்கை சிரமமாக்கிவிடும். இதன் தொடர்பில் புதிய குடி நுழைவு விதிமுறைகள் மூலம் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க தொழிலாளர் அமைச்சு, உள்துறை அமைச்சு உட்பட அரசாங்க அமைப்புகளுக்கு திரு டிரம்ப் உத்தரவிடுவார். அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதிலும் அமெரிக்க நிறு வனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான சம் பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த இரட்டை உத்தரவுகளால் நியாயமற்ற வர்த்தக முறை, குடி நுழைவு விதிமுறைகளால் பாதிக் கப்பட்ட குறிப்பாக நடுத்தர வர்க்க அமெரிக்க மக்கள் பயன் அடைவார்கள் என்று அதிகாரிகள் கூறினர்.