நியூசிலாந்தில் விசா கட்டுப்பாடு

வெலிங்டன்: ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசாவில் மாற்றங்களை அறிவித்த மறு நாளே நியூசிலாந்தும் திறன் பெற்ற ஊழியர்களுக்கான விசா விதிமுறைகளைக் கடுமையாக்கி யிருக்கிறது. நியூசிலாந்தின் உள்துறை அமைச்சர் மைக்கல் உட்ஹவுஸ், ஆஸ்திரேலிய வேலைகள் ஆஸ் திரேலியர்களுக்கே என்று ஆஸ் திரேலிய பிரதமர் கூறியதையும் அமெரிக்க வேலைகள் அமெரிக் கர்களுக்கே என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறிய தையும் எதிரொலிக்கும் வகையில் நியூசிலாந்து நாட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

இதையொட்டி இவ்வாண்டு இறுதியில் நியூசிலாந்து விசா விதிமுறைகளில் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. குறைந்தபட்ச ஊதியம், வெளி நாட்டு ஊழியர்களைக் குறிப் பிட்ட காலத்திற்கு அனுமதிப்பது போன்றவை மாற்றங்களில் சில எனத் தெரிவிக்கப்பட்டது. "சம நிலையைக் கட்டிக் காக்கும் நோக்கோடு மாற்றங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிக நியூசிலாந்து நாட்டவர்களை வேலைக்கு அமர்த்த முதலாளி களை ஊக்கமூட்டும், நியூசி லாந்து நாட்டவர்களின் திறன் களை மேம்படுத்த பயிற்சி அளிக் கப்படும்," என்று திரு உட்ஹவுஸ் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!