ஜகார்த்தா ஆளுநர் தேர்தல்; முன்னோடி கணிப்பில் அனிஸ் முன்னணி

ஜகார்த்தா: இந்தோனீசியாவும் அண்டை நாடுகளும் ஆவலுடன் எதிர்பார்த்த ஜகார்த்தா ஆளுநர் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முடிவுக்கு வந்தது. ஆனால் முன்னோடிக் கணிப் பில் முன்னாள் கலாசார கல்வி அமைச்சர் அனிஸ் பஸ்வெடான் முன்னணியில் இருப்பதாகக் கூறப்பட்டது. இவருக்கு எதிராகப் போட்டி யிட்ட சர்ச்சைக்குரிய வேட்பாளரான புர்னாமா பின்தங்கியுள்ளார். இந்தத்தேர்தலில் கிறிஸ்துவ சீனரான பாசுகி ஜாஹாஜா புர்னா வுக்கும் முஸ்லிம் வேட்பாளரான அனிஸ் ரஸியிட் பஸ்வெடானுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் திரு புர்னாமா மீது தெய்வ நிந்தனை குற்றம்சாட்டப் பட்டதால் ஜகார்த்தாவில் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் அனிஸ் ரஸியிட் பஸ்வெடான் வெற்றி பெறுவார் என்பதை முன்னோடிக் கணிப்பின் முடிவுகள் காட்டி யுள்ளன. ஆனால் அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் நேற்று மாலை வரை அறிவிக்கப்படவில்லை. தேர்தல் நடைபெற்ற இடங்களில் பதிவான வாக்குகளை அடிப்படை யாகக் கொண்டு வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு கணிக்கப்பட்டது. வேட்பாளர் அனிஸ் முன்னணி யில் இருப்பதை கணிப்பின் முடிவுகள் காட்டின.

பாசுகி புர்னாமா (இடம்), அனிஸ் பஸ்வெடான். படம்: ஊடகம்