வியட்னாமில் விவசாயிகளின் அதிரடி நடவடிக்கை

ஹனோய்: வியட்னாமில் நிலத் தகராறு தொடர்பில் 12க்கும் மேற்பட்ட போலிஸ்காரர்களையும் அதிகாரிகளையும் பிணைப் பிடித்து வைத்திருக்கும் விவ சாயிகள் தாங்கள் பிடித்து வைத்துள்ள போலிசாரை மீட்க அதிகாரிகள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அவர் களை எதிர்க்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர். அத்துடன் அந்த கிராமத்திற்குள் யாரும் வர முடியாதவாறு அந்த கிராமத்தைச் சுற்றிலும் தடுப்பு களை ஏற்பாடு செய்திருப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதனையும் மீறி அதிகாரிகள் யாரேனும் கிராமத்திற்குள் நுழைந் தால் பிணையாளிகள் தங்கி யிருக்கும் வீட்டை தீ வைத்துக் கொளுத்தப்போவதாகவும் விவ சாயிகள் மிரட்டல் விடுத் துள்ளனர். மொத்தம் 38 போலிஸ்காரர்களையும் உள்ளூர் அதிகாரிகளையும் விவசாயிகள் பிடித்து வைத்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!