தேர்தலில் பிரதமர் தெரேசா மேயின் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு

லண்டன்: பிரிட்டனில் வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் தெரேசா மேயின் கன்சர்வேடிவ் கட்சி 48 விழுக்காடு ஆதரவுடன் முன்னணியில் இருப்பதாகவும் அதற்கு அடுத்த நிலையில் தொழிற்கட்சி இருப்பதாகவும் ஆகக் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு கூறியது. கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு உணர்த்தியது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் 2020 ஆம் ஆண்டு முடிவடைகிறது. இருப்பினும் முன்னதாகவே வரும் ஜூன் 8ஆம் தேதி பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் தெரேசா மே முடிவு செய்தார். நாட்டில் நிலைத்தன்மையைக் கொண்டுவருவதற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது சிறந்தது என்று அவர் கூறினார். அவரது அந்த முடிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.