10வது மாடியிலிருந்து குதித்த சிறுவன் உயிர் தப்பிய அதிசயம்

பெய்ஜிங்: சீனாவில் பத்தாவது மாடியிலிருந்து குதித்த 7 வயது சிறுவன் அதிர்ஷ்டவசாக உயிர் பிழைத்ததாக தகவல்கள் கூறின. தொலைக்காட்சியில் கேலிச் சித்திரப் படத்தைப் பார்த்த பின்னர் அந்தச் சிறுவன் ஒரு குடையை பாரசூட் போல நினைத்துக்கொண்டு பத்தாவது மாடிக் கட்டடத்திலிருந்து குதித் திருக்கிறான். அதிர்ஷ்டவசமாக அச் சிறுவன் உயிர் தப்பியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். அவனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உயிருக்கு ஆபத்து இல்லை என்று அவனுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். அச்சிறுவன் உயிரைக் காப்பாற்றியது அவன் வைத் திருந்த குடை அல்ல என்றும் அவன் மின்கம்பத்தில் விழுந்த பின்னர் தரையில் விழுந்ததால் அவன் உயிர் பிழைத்ததாகவும் அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.