உச்சகட்ட விழிப்புநிலையில் தென்கொரிய அதிகாரிகள்

சோல்: வடகொரியா மேலும் ஒரு முக்கியமான ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் வேளையில் தென்கொரியா வில் விழிப்பு நிலை அதிகரிக் கப்பட்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். வடகொரியா எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அதன் 6வது அணுவாயுதத்தை சோதனை செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்கெனவே நிலவுகிறது. இந்நிலையில் வடகொரியா வின் 'மக்கள் ராணுவம்' அமைக்கப்பட்டு 85 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை பெரிய அளவில் கொண்டாட்டங்களும் அங்கு நடைபெறவுள்ளன. இந்த நேரத்தில் வடகொரியா ஏதேனும் சினமூட்டும் செயலில் ஈடுபடக்கூடும் என்று அஞ்சப் படுகிறது. இதனால் வடகொரியாவின் செயல்களை உன்னிப்பாக கண் காணித்து வருவதாக தென் கொரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!