பாரிசில் போலிஸ்காரரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிக்காரன்

பாரிஸ்: பிரான்சின் பாரிஸ் நகர வர்த்தகப் பகுதியான சாம்ப்ஸ் எலிசிஸில் வியாழக்கிழமை இரவு பயங்கரவாதி ஒருவன் சரமாரியாக சுட்டதில் போலிஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். அத்தாக்குதலில் மேலும் இரு போலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியை போலிசார் சுட்டுக் கொன்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிசில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பிரான்சில் வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள வேளை யில் அங்கு தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளது. அத்தாக்குதல் பற்றிக் குறிப் பிட்ட பிரெஞ்சு அதிபர் ஹொலாண்ட், அது பயங்கரவாதம் தொடர்பான தாக்குதல் என்று கூறினார். பாதுகாப்புப் படையினருக்கு நாட்டின் முழு ஆதரவு இருப்பதாகக் கூறிய அவர், தாக்குதலில் கொல்லப்பட்ட போலிஸ்காரருக்கு தேசிய அளவில் அஞ்சலி செலுத்தப்படும் என்று சொன்னார். பாரிசில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் நகரின் 'சாம்ப்ஸ் எலிசிஸிஸ்' பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பிறகு போலிஸ் வாகனத்தின் மீது நின்றுகொண்டிருக்கும் முகமூடியணிந்த போலிஸ்காரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் ஒரு போலிஸ்காரரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிக்காரனை போலிசர் சுட்டுக் கொன்றனர். தாக்குதலில் ஈடுபட்டவன் இஸ்லாமிய தீவிரவாதி என்று கூறப்படுகிறது. பிரான்சில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் அத்தாக்குதல் நடந்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!