வாக்காளர்களைப் பாதுகாக்க பிரான்ஸ் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாரிஸ்: பிரான்சில் பலத்த பாதுகாப்புக்கு இடையில் மக்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர். பாரிஸ் நகரில் சாம்ப்ஸ் எலிசிஸி பகுதியில் போலிஸ்காரர் ஒருவரை துப்பாக்கிக்காரன் சுட்டுக்கொன்ற சம்பவம் அந்நாட்டின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அங்கு தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் வேட்பாளர்கள் தங்கள் கடைசி நேர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயம் அத் தாக்குதல் நடந்துள்ளது. அத்தாக்குதல், தேர்தலைப் பாதிக்கக்கூடும் என்றும் தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத் தலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்று நடைபெறும் தேர்தலில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.

வலது சாரி தேசிய முன்னணி கட்சியின் வேட்பாளர் மெரினி லி பென், நாட்டு மக்களுக்கு அதிக பாதுகாப்பு தேவை என்றும் நாட்டில் பயங்கர வாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் வலி யுறுத்தி வருகிறார். இத்தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப் பதாகக் கூறப் படுகிறது. தேர்தல் இரண்டு கட்டங் களாக நடைபெறவுள்ளது. இன்று நடைபெறும் முதல் கட்ட வாக்குப் பதிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அதிக வாக்குகளைப் பெறும் இரண்டு வேட்பாளர்கள் மே மாதம் 7ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் சுற்றுத் தேர்தலில் போட்டியிடுவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!