ஆப்கான் தாக்குதலில் 140 ராணுவ வீரர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள மசார்- ஐ-சரீப் நகரத்தில் போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 140 ராணுவ வீரர்கள் உயிரிழந்த தாக ஆப்கான் அதிகாரிகள் தெரி வித்தனர். அத்தாக்குதலில் இன்னும் பலர் காயம் அடைந்ததாகவும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக் கக்கூடும் என்று அஞ்சப்படுவ தாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அத்தாக்குதலுக்கு தலிபான் போராளிகள் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ராணுவத் தளத்தைக் குறிவைத்து போராளி கள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக ராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறினார். ராணுவ சீருடை அணிந்து வந்திருந்த தலிபான் போராளிகள் சுமார் 10 பேர் ராணுவத் தளத்திற் குள் நுழைந்து தாக்குதல் நடத்திய தாகவும் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த வீரர்கள் மற்றும் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலி லிருந்து வெளியில் வந்தவர்கள் ஆகியோர் மீது போராளிகள் சரமாரியாக சுட்டதாக அதிகாரிகள் கூறினர்.

ஆப்கானில் ராணுவத் தலைமையகத்தைக் குறிவைத்து தலிபான் போராளிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆப்கான் ராணுவ வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்தாக்குதலில் குறைந்தது 140 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்