வடகொரியா: அமெரிக்க போர்க்கப்பலை மூழ்கடிக்க எங்கள் படை தயார்

அமெரிக்காவின் விமானந்தாங்கி போர்க் கப்பலை ஒரே அடியில் மூழ்கடிக்கத் தயாராக இருப்பதாக வடகொரியா நேற்று எச்சரித்தது. மேற்கு பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்கப் போர்க்கப்பலுடன் இரண்டு ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் பயிற்சி யில் இணைந்திருக்கும் வேளையில் வட கொரியாவின் எச்சரிக்கை வெளிவந்துள் ளது. அணுவாயுதச் சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா அமெரிக்காவையும் அதன் ஆசிய நட்பு நாடுகளையும் தாக்கப்போவதாக மிரட்டல் விடுத்து வருகிறது. இதன் காரணமாக பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் கொரிய தீபகற்பப் பகுதியில் கார்ல் வின்சன் என்னும் விமானந்தாங்கி போர்க்கப்பலை நிறுத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த போர்க்கப்பல் எந்தப் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறது என்ற விவரத்தை அமெரிக்கா வெளியிடவில்லை. இரண்டொரு நாட் களில் அதுகுறித்த விவரம் தெரியவரும் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நேற்று முன்தினம் தெரிவித்திருந் தார்.

இந்நிலையில், முரண்போக்கைத் தொடர்ந்து வரும் வடகொரியா அமெரிக்க போர்க்கப்பலைத் தாக்கவிருக்கும் செய் தியை வெளியிட்டுள்ளது. வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் செய்தித் தாளான ரோடோங் சின்முன்னில் நேற்று அந்தச் செய்தி வெளியானது. "எங்களது புரட்சிப்படைகள் அமெரிக் காவின் அணுசக்தி போர்க்கப்பலை ஒரே அடியில் தாக்கி மூழ்கடிக்கத் தயாராக உள்ளன. இதன் மூலம் எங்களது ராணுவப் படையின் ஆற்றலை உலகுக்கு நிரூபிப் போம்," என்று அந்தச் செய்தித்தாளின் மூன்றாம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!