பள்ளி கண்காணிப்பாளர் அடித்ததால் கால்களை இழந்த 11 வயது சிறுவன்

ஜோகூர் பாரு: கோத்தா திங்கியில் உள்ள தனியார் சமயப் பள்ளியைச் சேர்ந்த கண்காணிப்பாளர் ஒருவர், ரப்பர் குழாயினால் தொடர்ந்து அடித்த தால் 11 வயது சிறுவனின் கால்கள் பாதிக்கப்பட்டு துண்டிக்க நேரிட்டுள் ளது. சிறுவனின் தாயாரான ஃபெல்டா வானி அஹமட், 40, மார்ச் மாதம் நடைபெற்ற சம்பவங்களில் தமது மகன் முஹமட் டாஃபிக் அமின் முஹமட் கடாஃபியின் கால்களில் பல முறை கடுமையாக அடிக்கப்பட்டுள்ளார் என்றார்.

இனியும் தாங்க முடியாது என்று கூறி தம்மை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுமாறு மகன் கெஞ்சிய போதுதான் சம்பவங்கள் குறித்து தெரிய வந்ததாகவும் அவர் சொன்னார். "வீட்டுக்குத் திரும்பியபோது அவனுக்குக் காயச்சல் இருந்தது. கால்களில் பல இடங்களில் ரத்தம் கட்டியிருந்ததால் வீங்கியிருந்தன. ஏப்ரல் 19ஆம் தேதி சிகிச்சைக்காக மகனை மருத்துவமனையில் சேர்த் தேன். இன்று வரை அவன் மருத்துவ மனையிலேயே இருந்து வருகிறான். வெள்ளிக்கிழமை நடைபெற்ற அறுவை சிகிச்சையில் அவனுடைய இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டன," என்று அவர் கூறினார்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுவனின் கால்கள். படம்: த ஸ்டார்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!