பிரான்சில் வாக்களிப்பு

பாரிஸ்: பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெறும் வேளையில் நியூயார்க்கில் உள்ள பிரெஞ்சு தூதரகத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் உடன டியாக வெளியேற்றப்பட்டனர். நியூயார்க்கில் உள்ள இந்த தூதர கத்தில்தான் ஆயிரக்கணக்கான பிரெஞ்சு நாட்டவர்கள் வாக்களிக்க பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை அன்று தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்ட்ரல் பார்க் அருகில் ஃபிஃப்த் அவென்யூவில் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட் டிருந்ததால் காவல்துறையினருக்கு சந் தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கட்டடத் திலிருந்து அனைவரும் வெளியேற்றப் பட்டனர். மாலை 5.00 மணியளவில் அந்த வாகனம் சோதனையிடப்பட்ட பிறகு நிலைமை வழக்க நிலைக்குத் திரும்பியது. நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிகட் வட்டாரங்களில் சுமார் 28,500 பிரென்சு நாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக் கிழமை பிரான்சில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிபர் தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். ஆனால் நால்வருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை என்றால் 2வது சுற்று வாக் களிப்பு நடைபெறும்.

புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இந்தி யர்கள் வாக்கு அளித்தனர். படம்: ஏஎஃப்பி