ஈராக்கில் பாதுகாப்புப் படையினர் மீது போராளிகள் தாக்கியதில் 10 பேர் பலி

ஈராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பாலைவனப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது போராளிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 20 பேர் காயம் அடைந்ததாகவும் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பாக்தாத் அருகே உள்ள ருட்பா நகருக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை அந்தத் தாக்குதல் நடந்ததாக அந்த அதிகாரி சொன்னார். அத்தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் ஐஎஸ் போராளிகள்தான் அத்தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று போலிசார் கருதுகின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!