பிரான்சில் அடுத்த சுற்று தேர்தலில் இமேனுவல்-லி பென் கடும் போட்டி

பாரிஸ்: பிரான்சில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில், மிதவாதியான இமேனுவல் மக்ரோன் மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக தீவிர வலதுசாரிக் கட்சியான தேசிய முன்னணிக் கட்சியின் தலைவர் திருவாட்டி மெரின் லி பென் இரண்டாம் இடத்தில் உள்ளார். தேர்தலில் போட்டியிட்ட எந்த வேட்பாளருக்கும் 50 விழுக்காட்டு வாக்குகள் கிடைக்காததால் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு அங்கு மே 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவில் அதிக வாக்குகள் பெற்ற இமேனுவல் மக்ரோனும், மெரின் பென்னும் அடுத்த சுற்றில் போட்டியிடுகின்றனர். இதில் அதிக வாக்குகள் பெறுபவர் பிரான்சின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

பிரான்சில் முதல் சுற்று வாக்குப் பதிவில் அதிக வாக்குகளைப் பெற்ற 'என் மார்சே' அணியின் வேட்பாளர் இமேனுவல் மக்ரோன், ஆதரவாளர்களைப் பார்த்து கை அசைக்கிறார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!