கென்யாவில் எண்ணெய் லாரியுடன் பேருந்து மோதியதில் பலர் பலி

நைரோபி: கென்யா நாட்டின் துறைமுக நகரமான மோம்பாசாவிலிருந்து தலைநகர் நைரோபியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று நேற்று ஒரு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானது. முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்திச்செல்ல அந்தப் பேருந்தின் ஓட்டுநர் முயன்றபோது அந்தப் பேருந்து எதிர்திசையில் வேகமாக வந்த ஒரு டேங்கர் லாரியுடன் மோதியது. இந்தக் கோர விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். சுமார் 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!