மணிலாவில் இன்று முதல் சனிக்கிழமை வரை ஆசியான் கூட்டம்

மணிலா: இஸ்லாமிய தீவிரவாதி கள் மற்றும் இதர இடதுசாரி குழுக்களின் மிரட்டல்களுக்கு இடையில் 30வது ஆசியான் கூட்டம் இன்று பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் தொடங்கு கிறது. ஏப்ரல் 29ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஆசியான் கூட்டம் நடைபெறவுள்ளது. வரும் சனிக்கிழமை நடை பெறும் ஆசியான் தலைவர்கள் உச்சநிலைக் கூட்டத்தில் பத்து ஆசியான் நாடுகளின் தலைவர் களும் கலந்துகொள்கின்றனர். மியன்மார் தரப்பில் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி அம்மையார் இக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதற்கு முன்னதாக ஆசியான் நாடுகளின் மூத்த அதிகாரிகள் சந்தித்துப் பேசுவர். ஆசியான் கூட்டத்தை முன்னிட்டு பிலிப்பீன்சில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மணிலாவில் 40,000 பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர்.

மணிலாவில் ஆசியான் கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் அங்கு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்கும் பேராளர் களுக்கும் பாதுகாப்பு அளிக்க கூட்டம் நடைபெறும் இடத்திலும் அந்த இடத்தைச் சுற்றிலும் 40,000 பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!