ராணுவப் பலத்தைக் காட்டும் வடகொரியா

வடகொரியா அதன் ராணுவப் பலத்தைக் காட்டும் வகையில் உண்மையான தோட்டாக்களுடன் பீரங்கிகளையும் பயன்படுத்தி போர்ப் பயிற்சியை நடத்தியுள்ளது. இந்தப் போர்ப் பயிற்சியை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மேற்பார்வையிட்ட தாக தென்கொரிய ஊடகம் தெரிவித்தது. ஆனால் இதை தென்கொரிய தற்காப்பு அமைச்சு உறுதி செய்யவில்லை. வடகொரியாவின் அணு வாயுத, ஏவுகணைத் திட்டங்கள் குறித்து தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கவலை தெரிவித்து வரும் நிலையில், வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்குடன் யுஎஸ்எஸ் மிச்சிகன் எனும் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தென்கொரியா வை வந்தடைந்துள்ளது. அதுமட்டுமல்லாது, அமெ ரிக்கக் கடற்படைக்குச் சொந்த மான விமானந்தாங்கிக் கப்பலும் கொரிய தீபகற்பத்தை நோக்கி வி ரை ந் துகொண் டி ரு ப் ப தா க அமெரிக்க அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

தனது அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட வடகொரியா மறுத்துள்ள வேளையில் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணுவாயுதத் தூதர்கள் தோக்கி யோவில் சந்தித்து இதுகுறித்து கலந்துரையாடினர். தனக்கு எதிராக நடத்தப்படும் இந்த நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்து வடகொரியா இந்த மாபெரும் போர்ப் பயிற்சியை நேற்று நடத் தியது. தன்னைச் சீண்டினால் பேரழிவு நிச்சயம் என்பதை வலியுறுத்த வடகொரியா போர்ப் பயிற்சியை நடத்தியிருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறு கின்றனர். வடகொரியாவுக்கு எதிராக தடைகளை ஐநா விதித்துள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் அந்நாடு இன்னோர் அணுவாயுத அல்லது ஏவுகணைச் சோதனையை நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.