சீனாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பல்

சீனா முதல் முறையாக சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே உள்ள விமானம் தாங்கிக் கப்பலுடன் புதிய கப்பலும் சேவையில் ஈடுபடும். கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் சீனாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பல் அறிமுகமாகியிருக்கிறது. உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் வடகிழக்கு துறைமுகமான டாலியனில் கட்டப் பட்டது என்று ராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி சீன ஊடகம் குறிப்பிட்டது. படம்: ராய்ட்டர்ஸ்