தென்கொரியாவில் ‘தாட்’ ஏவுகணை எதிர்ப்பு

சோல்: வடகொரியா ஏவுகணைகளை பாய்ச்சியும் அணுவாயுத சோதனைகளை நடத்தியும் கொரிய தீபகற்பத்தில் உள்ள ஜப் பான், தென் கொரியா முதலிய நாடுகளை மிரட்டி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவின் மிரட்டலை சமாளிக்கும் விதத்தில் பிரச்சினைக்குரிய 'தாட்' ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களை தென் கொரியாவில் நிறுவும் பணிகளை அமெரிக்க ராணுவம் தொடங்கியிருக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு தென் கொரியாவின் உள்ளூர் மக் களும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளரான மூன் ஜே இன்னும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மூன் ஜே இன்னின் பேச்சாளர் ஒருவர், "மக்களின் விருப்பம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏவு கணை எதிர்ப்பு சாதனங்கள் நிறுவும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்," என்றார். கடந்த ஆண்டு தென் கொரி யாவும் அமெரிக்காவும் வடகொரி யாவின் மிரட்டலைச் சமாளிக்க 'தாட்' சாதனங்களை நிறுவ இணக்கம் கண்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!