ஜகார்த்தா ஆளுநருக்கு பிரியா விடை அளித்த மக்கள்

ஜகார்த்தா: ஜகார்த்தா ஆளுநர் பாசுக்கி ஜஹாஜா புர்னாமாவுக்கு நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் பிரியா விடை அளித்தனர். ஒரு வாரத்துக்கு முன்பு நடை பெற்ற ஜகார்த்தா ஆளுநர் தேர்த லில் அனிஸ் பெஸ்வெடானிடம் பாசுக்கி தோல்வி அடைந்தார். இதையடுத்து கடைசி நாளான நேற்று உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு அலுவலகம் வந்த அவரை ஏராளமானவர்கள் 'ஆஹோக்', 'ஆஹோக்' என்று பட்டப்பெயரைக் குறிப்பிட்டு ஆரவாரத்துடன் வரவேற்றனர். விடியற்காலை ஆறு மணிக்கே கூட்டம் கூடத் தொடங்கியது. பலர் பூச்செண்டுகளையும் பல வண்ண பலூன்களையும் கையில் பிடித்திருந்தனர்.

அவருக்கு நன்றி கூறும் வகையில் ஏராளமான மலர் மாலை களையும் அவர்கள் கொண்டு வந்தனர். இதனால் 700க்கும் மேற்பட்ட மலர் மாலைகள் குவிந்துள் ளதைக் காண முடிந்தது. "நீங்கள்தான் ஜகார்த்தாவின் சிறந்த ஆளுநர்," என்று அவரது ஆதரவாளர்கள் பலர் மாலைகளில் குறிப்புகளை எழுதியிருந்தனர். இந்த நிலையில் மே 9ஆம் தேதி அவர் மீதான தெய்வ நிந் தனை குற்றச்சாட்டில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சிறைத் தண்டனைக்குப் பதி லாக அவரை இரண்டு ஆண்டுகள் நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் வைக்கலாம் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!