வெனிசுவேலாவில் தொடரும் ஆர்ப்பாட்டம்

கராகஸ்: வெனிசுவேலாவில் அதிபருக்கு எதிராக ஆர்ப் பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் லத்தின் அமெரிக்க நாடுகள் அமைப்பிலிருந்து விலகுவதாக வெனிசுவேலா அறிவித்துள்ளது. உள்நாட்டு விவகாரத்தில் அந்த அமைப்பு தலையிடுவதால் அந்த அமைப்பிலிருந்து விலகு வதாக வெனிசுவேலா அரசாங் கம் தெரிவித்துள்ளது. வெனிசுவேலாவில் அதிப ருக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாகவே ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மூண்ட மோதல்களில் இதுவரை 30 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

வெனிசுவேலா அதிபருக்கு எதிராக அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன. கராகஸ் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தினரைக் கலைக்க போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். படம்: ஏஎஃப்பி